சர்வதேச விசாரணை தொடர்பில் சுமந்திரன் வாய் திறந்து சொல்கின்ற அனைத்தும் பொய் – கஜேந்திரகுமார் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, February 16, 2020

சர்வதேச விசாரணை தொடர்பில் சுமந்திரன் வாய் திறந்து சொல்கின்ற அனைத்தும் பொய் – கஜேந்திரகுமார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரர்ளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுமந்திரன் ஒரு சட்டத்தரணி. அவருக்கு விசாரணை என்றால் என்ன என்று தெரிந்திருக்க வேண்டும். போர்க்காலத்தில் என்ன நடந்தது என்ற கணிப்பு அறிக்கையை தான் அவர் சர்வதேச விசாரணையாக சித்தரித்து பாதிக்கப்பட்ட மக்கள் பொறுப்புக் கூறலைக் கைவிடச் செய்கின்ற வேலைகளையே செய்து வருகின்றார்.

இவ்வாறு தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்  பொன்னம்பலம் nஐனிவா விவகாரங்களில் சுமந்திரன் வாய் திறந்து சொல்கின்ற அத்தனையும் பொய் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சர்வதேச விசாரணை முடிவடைந்துவிட்டது என்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்வதற்கு வழியே இல்லை என கூட்டமைப்பின் பேச்சாளர் கூறியுள்ள விடயம் தொடர்பில் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது.

இந்தியா மேற்கு நாடுகளின் முகவர் அமைப்பாகச் செயற்பட்ட கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்று பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிற ஒரு நிலையில் அவர்களுடைய பெயரைப் பயன்படுத்தி தாங்கள் விரும்பிய மைத்திரி ரணில் ஆட்சிக்கு நெருக்கடிகளை கொடுக்க் கூடாதென்பதற்பதற்காக கடந்த மூன்று தடவைகள் இரண்டு வருட கால அவகாசத்தைக் கொடுத்திருந்தார்கள்.

ஆனால் இன்றைக்கு தமிழ் மக்களின் பிரிதிநிதிகள் என்ற பெயரில் நாங்கள் இருந்திருந்தால் எங்களுடைய கருத்துக்கள் தான் nஐனிவாவில் எடுபட்டிருக்கும். அந்த இடத்தில் நாங்கள் கடைசி வரைக்கும் கால அவகாசத்தைக் கொடுப்பதற்குத் தயாரில்லை என்று சொல்லியிருக்கிறம்.

இரண்டாவதாக மனித உரிமைப் பேரவையில் ஒரு பிரயோசனமும் இல்லை. சிறிலங்கா அரசு இதற்கு ஒருநாளும் ஒத்துழைக்கப் போறதில்லை. ஆகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு பொறுப்புக் கூறல் நடப்பதாக இருந்தால் சிறிலங்கா அரசின் விருப்பத்தை தாண்டி தான் நடக்க வேண்டும்.

அதைச் செய்வதற்கு பாதுகாப்புச் சபைக்கு சிறிலங்காவை கொண்டு போக வேண்டும். அவ்வாறு கொண்டு போவதற்கு மட்டும் தான் நாங்கள் ஒத்துழைப்போம். அதைவிட மற்றதெல்லாம் எங்களது மக்களை ஏமாற்றுவதற்காகத் தான் இருக்கும். சிறிலங்காவை சர்வதேச அரங்கில் ஒரு பிடியில் வைத்திருக்க வேண்டிய தேவை இந்த நாடுகளுக்கு இருக்கிறது.
ஏனென்றால் இன்றைக்கு ராஐபக்ச தரப்பு மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டது.

அதனால் மேற்குற்கிகும் இந்தியாவிற்கும் ஒரு பிரச்சனைக்குரிய தரப்பாக ராஐபக்ச வந்துவிட்டதால் அவருக்கு அழுத்தங்களைப் போடுவதற்கு இந்த விவகாரத்தை கையிலெடுப்பார்கள். ஆகவே இந்த மனித உரிமைகள் பேரவை சபையில் பிரயோசனமில்லை பாதுகாப்புச் சபையில் தான் பொறுப்புக்கூறல் கிடைக்கப் போககும் என்பதால் அங்கே கொண்டு செல்ல வேண்டும் என்று தான் நாங்கள் சொல்ல வேண்டும். இவ்வாறு சொல்லி இந்த முயற்சியை முன்னநகர்த்தியிருப்போம்.

ஆனால் துரதிஸ்ரவசமாக அவர்களின் முகவர்களாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக கூட்டமைப்பினர் இருக்கின்ற படியால் அந்த வல்லரசுகள் விரும்பிய அனுகுமுறையை மட்டும் தான் இவர்கள் செய்விக்கப் போகின்றனர். இந்த வித்தியாசத்தை எமது மக்கள் விளங்கிக் கொண்டும் எந்தளவு தூரத்திற்கு எங்களுக்கு வாய்ப்புக்கள் இருக்கிறதென்றையும் விளங்கிக் கொண்டு அவர்கள் தங்களது எதிர்கால தலைமைத்துவத்தை தீர்மானிக்க வேண்டும்.

இதே வேளை nஐனிவா விவகாரம் சர்வதேச விசாரணை என்கின்ற இந்த விடயங்களில் சுமந்திரன் வாய் திறந்து சொல்கிற அத்தனையும் பொய். சர்வதேச விசாரணை முடிவடைந்து விட்டது எப்படி எப்போது முடிவடைந்து விட்டதென்று சொல்ல வேண்டும். ஏன் என்றால் அவர் ஒரு சட்டத்தரணி. அவருக்கு இந்த விசாரணைகள் தொடர்பில் தெரிந்திருக்க வேண்டும்.

உண்மையில் நீதிமன்றத்தில் ஒரு விசாரணை நடப்பதாக இருந்தால் சட்டத்தரணி ஒரு குற்றவாளியை விசாரிப்பார். அரச தரப்பின் சார்பில் விசாரிப்பார். அதே நேரம் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் இன்னொரு சட்டத்தரணி குறுக்கு விசாரணை செய்வார்கள். அந்த குறுக்கு விசாரணை எல்லாம் செய்து அந்த நீதிமன்றத்தில் இருக்கின்ற நீதிபதி எல்லாத்தையும் கேட்ட பின்னர் தீர்ப்பு வழங்கப்படும்.

ஆகவே இங்கு அப்படியொரு விசாரணை நடந்திருக்கிறதா, ஆனால் எங்களது விடயங்கள் தொடர்பாக அப்படியொரு விசாரணை எந்தவொரு இடத்திலும் நடக்கவில்லை.

வெறுமனே ஐ.நா மனித உரிமை ஆணையாளருடைய அலுவலகம் தங்களுடைய கணிப்பின் படி இங்கே என்ன நடந்திருக்கிறதென்பதை அவர்கள் ஒரு அறிக்கையாக வெளியிட்ட விசயத்தை அதாவது போர் காலத்தில் நடந்த விசயத்தை தங்களுடைய கணிப்பாக வெளியிட்ட அறிக்கையை சுமந்திரனும் அவர் சார்ந்த கூட்டமைப்பும் சர்வதேச விசாரணை என்று பொய்யாக மக்களுக்கு சித்தரித்து பொறுப்புக் கூறலை கைவிடச் செய்வதற்குரிய முயற்சியைதை; தான் எடுக்கின்றனர்.

இன்றைக்கு போரக்குற்றவாளியாக சந்தேககிக்கப்படுகின்ற கோட்டபாய ராஐபக்ச போர் முடிந்து பத்து வருசத்திற்குப் பிறகு விசாரிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்டாமல் அவர் தேர்தலில் போட்டியிட்டு அதிபராகத் தெரிவு செய்யப்படுவதற்குரிய வாய்ப்பை எடுத்துக் கொடுத்ததே கூட்டமைப்பு தான். கூட்டமைப்பு தொடர்ச்சியாக அதைத் தான் செய்யப் போகிறது.

இங்கு ஒரு விசாரணையும் நடக்கவில்லை. வெறுமனே ஒரு அறிக்கையை மட்டும் தான் அந்த அலுவலகம் விட்டது. ஆக அந்த அறிக்கையை கூட்டமைப்பு ஒரு விசாரணையாகக் காட்டி எமது மக்களை ஏமாற்றுகிறது.

இரண்டாவதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு போகேலாது என்கின்றனர். ஏனென்றால் பாதுகாப்புச் சபையில் வீட்டோ பவரை சீனா பாவிக்கும் என்று சொல்கின்றனர். ஆனால் இன்றைக்கு சீனாவின் அயல் நாடாகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரதேசதமாக இருப்பது மியன்மார்.

அந்த மியன்மார் ரொகேனியா தேசத்தை அந்த மக்களை இனப்படுகொலை செய்கின்றனர். அந்த விசயத்தை பாதுகாப்பு சபையூடாக குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு போவதற்கு சீனா வீட்டோ பவரைப் பாவிக்கும் என்று சொன்னதால் இன்றைக்கு மேற்குலகம் ஒரு புதிய அனுகுமுறையைக் கண்டு பிடித்திருக்கிறது.

அதாவது குற்றவியல் நீதிமன்றமே மியன்மாரை பாதுகாப்புச் சபைக்கூடாக விசாரிக்காமல் நேரடியாக விசாரிக்கத் தொடங்கியிருக்கிறது. அது எப்படி என்றால் மியன்மாரில் இருக்கக் கூடிய ரொகினியா மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு அவர்களில் மிஞ்சி இருக்கின்றவர்கள் வெளியேற அந்த வெளியேறிய மக்கள் பங்களாதேஸ் போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்க பங்களாதேஸ் நிரந்தரமான ரோம் சட்டத்தை அங்கீகரித்திருக்கிற நிலையில் அதாவது ஐசீசி யின் உறுப்பு நாடாக பங்களாதேஸ் இருக்க பங்களாதேசிற்கு அந்த மக்கள் வந்து சேர்ந்ததை வைத்து ஐசிசி இன்றைக்கு மியன்மாருக்கு எதிராக விசாரணை செய்ய ஆரம்பித்திருக்கிறது.

இதில் என்ன முக்கியமானது என்றால் மியன்மார் ஐசீசி சட்டத்தில் கைச்சாத்திடாமல் இருந்தாலும் கூட மியன்மாரில் தொடங்கிய குற்றம் அந்த நாட்டின் எல்லையை தாண்டி இன்னொரு நாட்டிற்கு பாதிப்பிற்கு உள்ளாக்கப்படுகிற மக்கள் இன்னொரு நாட்டிற்குப் போய்ச் சேர அந்த நாடு ஐசிசி அங்கத்துவத்தில் இருந்தால் மியன்மார் விசாரிக்கப்படலாம் என்பது இன்றைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருக்கிறது.

ஆகவே சுமந்திரன் இன்றைக்கு ஐசியால் விசாரணைக்கு இடமில்லை என்று சொல்கின்றார் என்றால் அது இன்மொருக்கா பாதிப்பட்ட மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு பொறுப்புக் கூறல் கிடைக்கக் கூடாதென்ற அடிப்படையில் இந்த அரசாங்கத்தைப் பாதுகாக்கின்ற கோணத்தில் சொல்கிற கருத்தாக மட்டும் தான் பார்க்க வேண்டும். அதனை விடுத்து வேறு எந்தவொரு கோணத்திலும் அவருடைய கருத்தை பார்க்க முடியாது.