புண்களில் புழுக்கள் காணப்பட்ட நிலையில் இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட மாடுகள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, January 1, 2020

புண்களில் புழுக்கள் காணப்பட்ட நிலையில் இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட மாடுகள்!


புண்­களில் புழுக்கள் காணப்­பட்ட நிலையில் இறைச்­சிக்­காக கொண்டு செல்லப்­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் நான்கு மாடு­களை கம்­பளை பிராந்­தி­யத்­துக்குப் பொறுப்­பான விசேட அதி­ர­டிப்­ப­டையினர் கைப்­பற்­றி­யுள்­ளனர்.இது தொடர் பில் சந்­தே­கத்தின் பேரில் ஒரு­வ­ரையும் கைது செய்­துள்­ளனர்.
அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ருக்கு திங்­கட்­கி­ழமை கிடைக்­கப்­பெற்ற இர­சியத் தகவல் ஒன்றின் அடிப்­ப­டை­யிலே இவை கைப்­பற்­றப்­பட்­டன.  குறித்த மாடு­களில் பாரிய காயங்கள் காணப்­ப­டு­வ­தோடு புண்­க­ளி­லி­ருந்து புழுக்­களும் வெளி­வ­ரு­வ­தாக அதி­ர­டிப்­ப­டை­யினர் தெரி­வித்­த­துடன், கைப்­பற்­றப்­பட்ட மாடு­களை கம்­பளை பொலிஸ் நிலை­யத்தில் ஒப்­ப­டைத்­தி­ருந்த நிலையில் காயங்­க­ளுக்­குள்­ளான மாடு­களில் ஒன்று நேற்றுக் காலை உயி­ரி­ழந்­துள்­ள­தாக தெரிய வருகி­றது.
கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபரை கம்­பளை மாவட்ட நீதி­மன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்