அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை நியமிப்பதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் கூடிய தெரிவுக் குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, அரசாங்க நிதி பற்றிய குழு ஆகியவற்றுக்கான உறுப்பினர்களும் பெயரிடப்பட்டுள்ளனர்.
வரும் பெப்ரவரி 5ஆம் திகதி குறித்த பெயர்கள் சபையில் அறிவிக்கப்படும் என்பதுடன் இந்தக் குழுக்களுக்கான தலைவர்களின் தெரிவு உறுப்பினர்களின் உறுதிப்படுத்தல்களுடன் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.