போர் பிரகடன அதிகாரத்தை டிரம்பிடம் பறிக்க முடிவு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, January 10, 2020

போர் பிரகடன அதிகாரத்தை டிரம்பிடம் பறிக்க முடிவு!

வளைகுடாப் பகுதியில் அமெரிக்கா-ஈரான் நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள முறுகலையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் இருந்து போர்
பிரகடனம் செய்யும் அதிகாரத்தைப் பறிக்கும் தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளது.


இத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் 224 பேர் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 194 பேர் எதிராகவும் வாக்களித்தனர். டிரம்ப் சார்ந்த குடியரசுக் கட்சியினரின் 3 பேர் அவருக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அடுத்து, சென்ட் சபையிலும் இதுபற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், டிரம்பின் போர் பிரகடன அதிகாரம் முழுமையாகப் பறிக்கப்படும்.

பிரதிநிதிகள் சபையில் நிறைவேறிய இத் தீர்மானம் செனட் சபையிலும் முன்மொழியப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சிக்கு 53 பேரும், ஜனநாயக கட்சிக்கு 47 பேரும் உள்ளனர். இதனால், தீர்மானம் நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஈரான் முக்கிய தளபதி குவாசிம் சுலைமானியை அமெரிக்க படைகள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி கொன்றது. இதற்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் விமானப் படை முகாம்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இத் தாக்குதலில் 80 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்தாலும், அமெரிக்கா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

இருநாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் போர் மூளும் அபாயம் உருவாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் புரிவதையே விரும்புவதாக கூறப்படும் நிலையில் டிரம்ப், போர் பிரகடனம் செய்துவிடக் கூடாது என்பதற்காக, அந்த அதிகாரத்தை பறிக்க அந்நாட்டு பிரதிநிதிகள் சபை தீர்மானம் கொண்டு வந்ததுள்ளது..

செனட் சபையிலும் இத் தீர்மானம் நிறைவேறினால், டிரம்பிடம் இருந்து போர் பிரகடனம் செய்யும் அதிகாரம் பறிக்கப்படும். அதன் பின்னர் இருசபைகளின் ஒப்புதல் இல்லாமல் போர் செய்யும் முடிவை தன்னிச்சையாக டிரம்மால் எடுக்க முடியாது.