பயங்கரவாதக் குண்டுத் தாக்குதலில் முற்றாக சேதமடைந்த நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நத்தார் பண்டிகையை முன்னிட்டு விசேட ஆராதனை வழிபாடு இன்று (25) அதிகாலை இடம்பெற்றது.
கொழும்பு பேராயர் கார்த்தினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் விசேட கிறிஸ்மஸ் ஆராதனை வழிபாடு இடம்பெற்றது.
இதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்த பலரும் கலந்துகொண்டு ஆராதனை வழிபாடுகளை மேற்கொண்டனர்.