இலங்கை – பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, December 2, 2019

இலங்கை – பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மஹ்முத் குரேஸி, இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவை சந்தித்துள்ளார்.

வெளியுறவு அமைச்சில் இன்று (திங்கட்கிழமை) காலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு இலங்கைக்கு விஜயம் செய்த பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை இராஜதந்திரிகள் சிலரை சந்தித்து கலந்துரையாடியுள்ளாரென்பது குறிப்பிடத்தக்கது.