முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கைது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, December 18, 2019

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கைது!

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.2016ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து தொடர்பாகவே சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டதாக சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி நிசாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இவ்விபத்து தொடர்பாக, பாட்டலி சம்பிக்க ரணவக்கவை கைதுசெய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு சட்டமா அதிபரினால் கொழும்பு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட ஆலோசனையின் படி இந்த நடவடிக்கை இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

கவனயீனத்துடன் வாகனத்தைச் செலுத்தி நபரொருவரை படுகாயமடையச் செய்தமை மற்றும் வீதி விபத்தின்போது வேறு ஒரு நபரை சாரதியாக அடையாளப்படுத்தியதாக முன்னாள் அமைச்சருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.