ஜனாதிபதி தேர்தலில் பகிஷ்கரிப்பு நிலைப்பாட்டை தமிழ் தேசிய மக்கள் முன்னணி எடுத்தது அந்த கட்சிக்குள் இரண்டு வேறுபட்ட நிலைப்பாடு உருவாகியுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் பகிஷ்கரிப்பு நிலைப்பாட்டை தமிழ் தேசிய மக்கள் முன்னணி எடுத்திருந்தது. இது கட்சிக்குள்ளேயே பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியது. அனேகமாக உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இதை ஏற்கவில்லை. கட்சி பகிஷ்கரிப்பு நிலைப்பாட்டை எடுத்தபோதும், கணிசமான உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொண்டனர்.
வடக்கு, கிழக்கில் வாக்களிப்பு வீதம் அதிகமாக இருந்தது.
இந்த நிலையில், கட்சியின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் சில தினங்களின் முன்ன நடந்தது. இதன்போது உள்ளூராட்சி தேர்தல் நிலைப்பாடு தொடர்பில் ஆராயப்பட்டது. இதன்போது, கட்சியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் உள்ளிட்ட ஒரு பகுதியினர், பகிஷ்கரிப்பு நிலைப்பாடு பிழையானது என தெரிவித்தனர். எனினும், கஜேந்திரகுமார், கஜேந்திரன் ஆகியோர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் கூட்டத்தில் நீண்ட வாதப்பிரதிவாதங்கள் பல மணி நேரமாக நடந்தது.