ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் கட்சியின் முடிவுக்கு எதிராக செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நடைபெறவுள்ள தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை வெற்றி பெறச் செய்வது மாத்திரமே தங்களது தற்போதைய நோக்கமெனவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.