உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரர் பிரபாகரன்: தயாசிறி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, November 14, 2019

உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரர் பிரபாகரன்: தயாசிறி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!

புலிகளிடமிருந்த 7000 மெட்ரிக் தொன் தங்கத்தை கோட்டாபய கொண்டு சென்றதாக, ராஜித கூறியுள்ளார். 7,000 மெட்ரிக் தொன் தங்கம் வைத்திருந்தால் பிரபாகரன்தான் உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரராக இருந்திருப்பார். இப்படி கூறித்தான் வடக்கு மக்களை அவர்கள் ஏமாற்றுகிறார்கள் என தெரிவித்துள்ளார் சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர.

நேற்று முன்தினம் (12) யாழ்ப்பாணத்தில் சு.க ஆதரவாளர்களுடன் நடந்த கலந்துரையாடலில் இதனை தெரிவித்தார்.

தமிழர்களை கடத்தி முதலைக்கு போட்டதாக ராஜித கூறிய தகவலை தெற்கிலுள்ளவர்கள் கணக்கெடுக்கவில்லை. இங்குள்ள ஊடகங்கள்தான் அதை தலைப்பு செய்தியாக்கின. கொலைக்குற்றவாளியை பாதுகாத்தால் 5 வருட சிறைத்தண்டனை. ராஜித 5 வருடம் சிறையிலிருப்பார். அப்போது அதையும் தலைப்பு செய்தியாக போடங்கள் என்றனர்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாதுகாப்பான சுபீட்சமான நாட்டை கட்டியெழுப்ப கோட்டாபயவை ஜனாதிபதியாக்கவே நாம் முயற்சிக்கிறோம். இன்று சுதந்திரக்கட்சியும், பெரமுனவும் மற்றும் கட்சிகளும் இணைந்து இந்த கூட்டணியை அமைத்துள்ளோம். பெரமுன 50 இலட்சம் வாக்குகளை கொண்டுள்ள கட்சி. சு.க தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணியிடம் 15 இலட்சம் வாக்குகள் உள்ளன. தொண்டமானின் கட்சியிடம் 130,000 வாக்குகள் உள்ளன. டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான் கட்சியும் இணைத்து, நாம் 70 இலட்சம் வாக்குகளுடன் களமிறங்கியுள்ளோம். ஐ.தேகவிடம் 36 இலட்சம் வாக்குகள்தான் உள்ளன.

உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 3 இலட்சம் சொச்சம் வாக்குகளை பெற்றது. அதை 4 இலட்சமாக கருதினாலும், ஐதேக 40 இலட்சம் வாக்குகளைத்தான் பெறும்.

புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 24 ஆயிரம். புதிய வாக்குகளை 3 இலட்சமாக கருதி, அதையும் சஜித்திற்கு கொடுத்தாலும், அவர்களிற்கு காணாது.

2015 கிடைத்த 9இலட்சத்து 49 ஆயிரம் வாக்குகளையும், 10 இலட்சம் வாக்குகளாக கணக்கிட்டு சஜித்திற்கு கொடுத்தால் 53 இலட்சம் மட்டுமே.

எங்கள் வாக்கு வங்கி 70 இலட்சம். சஜித் 53 இலட்சம் வாக்குகளையே கொண்டுள்ளார்.

நாம் ஏன் யாழ்ப்பாணம் வந்தோம். வரலாற்று அடிப்படையில் யாழ்ப்பாண மக்களை காலம்காலமாக ஏமாற்றி வருகிறார்கள். சு.க இனவாத கட்சியல்ல. எமது கட்சிக்கு தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு காலம்காலமாக கிடைத்துள்ளது. 1982ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் கொப்பேக்கடுவ யாழ் மாவட்டத்தை வென்றார். சிறிமாவோவை யாழ்ப்பாணம் வந்தபோது வெங்காயம், மிளகாய் மாலை போட்டுத்தான் யாழ் மக்கள் வரவேற்றார்கள். அவ்வளவு அன்பையும் ஆதரவையும் யாழ் மக்கள் வழங்கினார்கள். நாம் அந்த அன்பையும், ஆதரவையும் மீளப்பெறும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றி பிழைக்கும் காலத்தை உருவாக்க விரும்பவில்லை. ஒவ்வொருமுறையும் உங்களது வாக்குகளை பெற்று நாடாளுமன்றம் செல்லும் கூட்டமைப்பினர், அதிகார பரவலாக்கம் பற்றி பேசுவதாக கூறி, தமக்கான சலுகைகளையும் வசதிகளையும் மட்டும் பெற்றுக்கொண்டனர்.

அவர்கள் வண்டிலில் கட்டிய மாடுகளைபோல தமிழ் மக்களை இழுத்து சென்று தமக்கான வசதிகளை பெறுகிறார்கள். உங்கள் பிரச்சனைகளை காயம்போல காட்டிக்காட்டி பிழைக்கிறார்கள்.

கடந்த 5 வருடத்தில் அவர்கள் தீர்த்து வைத்த ஒரு பிரச்சனையை உங்களால் சொல்ல முடியுமா? கடந்த 5 வருடமாக புதிய அரசியலமைப்பு திருத்தத்தை நாடு, சர்வதேசம் முழுவதும் விற்றுப் பிழைத்தார்கள். உங்கள் பிரச்சனையை அடகு வைத்து நாடு முழுவதும் சுற்றி வந்தார்கள்.

இந்த பிரச்சனையை தீர்க்கக்கூடிய பொன்னான காலம்தான் நல்லாட்சிக்காலம். இரண்டு கட்சிகளும் இணைந்து ஆட்சியமைத்தன. நாங்கள் அரசியலமைப்பிற்கு சபைக்கு சு.கவின் முன்மொழிவுகளை சமர்ப்பித்திருந்தோம். நாங்கள் அந்த குழவிற்கு சொன்னொம், 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த கேட்டோம். அதன்மூலம் நாம் சொல்ல வருவது, பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்குங்கள் என்பதே. உங்களிடம் வந்து வாக்குக்கேட்கும் சஜித், ரணில் தமது விஞ்ஞாபனத்தில் இதைப்பற்றி எந்தவொரு வசனத்தையும் குறிப்பிடவில்லை.

எவ்வாறு அதிகார பகிர்வது, எப்பொழுது தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பது என்பது பற்றி அவர்கள் எதையும் கூறவில்லை. அவர்கள் எப்படி அடுத்த 5 வருடத்தில் உங்கள் பிரச்சனைகளை தீர்ப்பார்கள். அவர்கள் மௌனமாக இருக்க, இதைப்பற்றி உங்களிடம் பேசுவது தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான். அவர்களை நீங்கள் நம்ப வேண்டாம். உங்களை ஏமாற்றியது காணும். நாம் எல்லோரும் இணைவோம். நாம் எல்லோரும் கோட்டாபயவை வெற்றியடைய செய்து, உங்கள் பிரச்சனையை தீர்ப்போம்.

உங்கள் முக்கிய பிரச்சனைகள் எமக்கு தெரியும். தமிழ், முஸ்லிம் மக்களிற்கு இங்குள்ள பிரதான பிரச்சனை கல்வி. அடுத்தது பொருளாதார பிரச்சனை. எவ்வாறு வருமானத்தை பெருக்குவது? எப்படி நீ பெற்றுக்கொள்வது, வீதிகளை அமைப்பது என்பதே.

2015 இன் முன் மஹிந்தவும், பின்னர் மைத்திரியும் உங்களிற்கு பாரிய சேவை செய்தனர். யுத்தத்தில் தொடர்புபட்ட 18 ஆயிரம் பேரை புனர்வாழ்வக்குட்படுத்தி சமூகத்துடன் இணைத்தார். வடக்கில் காணிகளை விடுவித்தார் மைத்திரி. மொரகஹந்த நீத்தேக்கத்திலிருந்த இரணைமடுவிற்கு நீரைக் கொண்டு வந்தார். உங்கள் நீர்த்தேவையை பூர்த்தி செய்தார். அந்த நீரை கொண்டு வரும்போதும் கூட்டமைப்பு எதிர்த்தது. தெற்கு கொடுக்க வேண்டிய நீரைத்தான் மைத்திரி வடக்கிற்கு கொண்டு வந்து உங்களிற்கு கொடுத்தார். இரத்தத்தை விட தண்ணீர் முக்கியமானது.

சஜித் பிரேமதாசவிற்கு வாக்குகளை பெற்றுக்கொடுக்க இங்கு வந்துள்ளது அவரது அடிமைகள். அவர் வாய் திறக்கவில்லை. கடந்த 5 வருடத்திலும் அதைத்தான் செய்தார்கள். நாம் மீண்டும் ஏமாற தயாரில்லை. அன்பாக தமிழ் மக்களிற்கு சொல்வது, சிங்கள மக்களின் ஊடாக உங்களிற்கு கைகொடுப்பேன். நாம் ஒன்றாக இணைவோம்.  நம் எல்லோரது உடலிலும் ஒரே இரத்தம்தான். தமிழ், சிங்கள இரத்தம் என்ற வேறுபாடில்லை.

யுத்தத்தின்போது இராணுவத்தினருக்கு கொடுத்தது உங்கள் மக்களின் இரத்தம்தான். தமிழீழ விடுதலைப்புலிகளிற்கு தென்பகுதியிலுள்ளவர்களின் இரத்தத்தைதான் கொடுத்துள்ளனர். உங்கள் மத்தியில் உள்ள துரோகிகளிற்காக எமக்கிடையலான நல்லிணத்தை நீங்கள் இழக்கக்கூடாது.

தமிழில் ஐக்கியம் என உள்ளது. சிங்களத்தில் ஏக்கிய என கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் யுனைட்டட் என கூறுகிறார்கள். வடக்கில் தமிழில் ஒன்றையும், தெற்கில் சிங்களத்தில் இன்னொன்றையும் கூறுகிறார்கள். இதை செய்வது சட்டத்தரணி சுமந்திரன். அவரக்கு தெரியும் தமிழ் மக்களிடம் எதை விற்கலாமென.இங்கு ஒருமித்த நாடு என்கிறார்கள், அங்கு ஏக்கிய ராஜ்ஜிய என்கிறார்கள். எங்கள் விஞ்ஞாபனத்தில் அனைத்து மொழிகளிலும் ஒன்றுதானுள்ளது.

நேற்று முன்தினம் ராஜிதவின் சேனரத்னவின் நாடகம் நடந்தது. அவர்தான் கதை திரைக்கதை ஆசிரியர். இரண்டு நாடக நடிகர்களை பக்கத்தில் அமர்த்தி வைத்திருந்தார். தாடி, மீசை ஒட்டி தோற்றத்தை மாற்றியிருந்தார்கள். கோட்டா மக்களை கொன்று சுறாவிற்கு கொடுத்தார் என சொன்னார்கள். ராஜித சொன்னார், இல்லையில்லை முதலைக்கு போட்டார்கள் என. தெற்கு ஊடகங்கள் அதை கணக்கில் எடுக்கவில்லை. இங்கு வந்து பார்த்தால் அது தலையங்க செய்தி. உங்களை ஏமாற்றவே அதை செய்தார்கள்.

பொய் தாடி ஒட்டி, முகமூடி போட்டு வந்தவர் வஜிர அபேவர்த்தனவின் வாகன சாரதி. ஒரு கொலைகாரனிற்கு அடைக்கலம் கொடுத்தது 5 வருட தண்டனைக்குரிய குற்றம். ராஜித அந்த தண்டனையை அனுபவிப்பார். அன்று நீங்கள் இந்த செய்தியை உங்கள் பத்திரிகையில் தலைப்பு செய்தியாக போடுங்கள். அப்போதுதான் அதை தின்றது சுறாவா? முதலையா என்பது தெரியும்.

இன்னொரு கதை விட்டார்கள், இங்கிருந்து தங்கத்தை கொண்டு சென்றதாக

யாழ்ப்பாணத்தில் 6 இலட்சம் மக்கள் உள்ளனர். 7000 மெட்ரிக் தொன் தங்கத்தை இந்த மக்கள் தொகையால் பிரித்தால் ஒவ்வொருவரிடமும் 11 கிலோ தங்கம் இருக்க வேண்டும். உங்களிடம் உள்ளதா?

அமெரிக்காவிடம் உள்ளது 8134 மெட்ரிக் தொன் தங்கம். அவர்களின் நாட்டின் வருமானத்தையும், பனவீக்கத்தையும் அதன் இருப்புத்தான் தீர்மானிக்கும்.

3367 மெட்ரிக்தொன் தங்கம் உள்ளது. இவைதான் தங்கம் அதிகமாக உள்ள நாடுகள். ராஜித சொல்கிறார், இலங்கையில் 7,000 மெட்ரிக் தொன் உள்ளதாக. அப்படியானால் இலங்கைதான் உலகத்திலேயே இரண்டாவது தங்கமுள்ள நாடு. நாங்கள் இதை வைத்து யாரிடமும் கடன் வாங்காமல் வாழலாம். இப்படியான பொய்கள் சொன்னால் நரகத்திற்கு அல்ல அதையும் விட கீழாக செல்ல வேண்டும்.

இந்த 7000 தொன் பிரபாகரனிடமிருந்திருந்தால் 450 பில்லியன் டொலரை வைத்திருந்து உலகத்தின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருந்திருப்பார். இப்படித்தான் பொய்களை சொல்லி உங்களை ஏமாற்றுகிறார்கள். இனியாவது ஏமாறாமல் இருங்கள் என்பது.

கோட்டாபய வெற்றிபெற்றதும் இம்முறை அங்கஜன் இராமநாதனிற்கு ஒரு அமைச்சு பதவி கொடுப்போம் என்றார்.