முகாம்களிலும் அரச இலட்சணையாம்? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, November 24, 2019

முகாம்களிலும் அரச இலட்சணையாம்?

அனைத்து இராணுவ அலுவலகங்கள் மற்றும் முகாம்களில் உருவப்படங்களுக்கு பதிலாக அரச இலட்சனைகள் அல்லது இராணுவ இலட்சனைகளை காட்சிபடுத்துமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உத்தரவிட்டுள்ளார்.


ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பிறப்பித்த உத்தரவுக்கு அமைவாகவே இராணுவத் தளபதி நாட்டில் உள்ள அனைத்து இராணுவ நிலையங்களுக்கும் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

நிதி அமைச்சை தவிர வேறு எந்த அமைச்சுப்பதவியையும் தனக்கு தருவதாக தற்போதைய அரசாங்கம் தனக்கு அழைப்பு விடுத்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் எம்.பி. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஆனால் தான் அதற்;கு மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய அறிவிக்கப்பட்டவுடன், சரத் பொன்சேகா அதனை சரியான தெரிவு என்று குறிப்பிட்டதுடன் , அதனை தொடர்ந்து கோத்தபாய தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னுடன் இணையுமாறு கோரிக்கை விடுத்தும் குறிப்பிடத்தக்கது