சுவிஸ் லுட்சேர்ன் அருள் மிகு துர்க்கை அம்மன் ஆலயத்தில் 22.11.2019 வெள்ளிக்கிழமை மாலை 19.15மணி க்கு எம் தாயக விடுதலைக்காக தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கு மாவீரர் வணக்க வழிபாடு இடம் பெற்றது. லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயத்தில் தமிழீழ தேசிய மாவீரர் வாரத்தை முன்னிட்டு ஆலயத்தில் உள்ள மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர் வணக்க வழிபாடு துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகசபை, அடியவர்கள், லுட்சேர்ன் மாநில பொது அமைப்புகள், லுட்சேர்ன் மாநில வர்த்தக நிறுவனங்கள் என எல்லோரும் சேர்ந்து வணக்க நிகழ்வு செய்திருந்தனர். ஆலயத்தில் மாவீரர் நினைவு சுமந்த பாடல்கள் ஒலிபரப்பிக்கொண்டு இருந்தது. பொது சுடரினை சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு லுட்சேர்ன் மாநில பொறுப்பாளர் ஏற்றி வைத்தார். மாவீரர்களின் பெற்றோர், சகோதரங்கள் மாவீரர் பூசையில் கலந்து கொண்டனர்.
லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயத்தில் மாவீரர் வணக்க வழிபாடு 25 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.