எழடா தமிழா அடிடா பாறையை
தலைவன் பிறந்த நாளை வாழ்த்தி
வேங்கைத் தலைவன் புகழைப் பாடி
ஆட்டம் ஆடு வானில் ஏறு
அறுபத்தைந்தின் அகவை காணும்
போரின் உருவை போற்றிடுவோம்
உறுமும் புலியின் ஓர்மம் விதைத்த
இறுங்கா திமிரை வாழ்த்திடுவோம்.
செந்தமிழின் நாயகனே வாழ்க பல்லாண்டு!
செவ்விழியின் பேரலையே வாழ்க பல்லாண்டு!
வல்லமையின் வீச்சுருவே வாழ்க பல்லாண்டு!
பேரொளியின் திருமுகமே வாழ்க பல்லாண்டு!
எழடா தமிழா!
பிரபாகரனாய் உருவாய் வந்தாய்
ஈழப் பாதை திறந்ததுவே!
அரணாய் எம்மை காவல் காத்தாய்
அழியும் ஈழம் நிமிர்ந்ததுவே!
போரின் வலிமை எம்முள் விதைத்தாய்
மறவர் கூட்டம் எழுந்ததுவே!
பாரின் பதிவில் ஈழம் விதைத்தாய்
தமிழர் சரிதம் பதிந்ததுவே!
ஆளப்பிறந்த தமிழன் அவன் ஆட்சி ஏறும் விரைவில்
ஆட்டமாடும் பகைவர் அவர் ஆட்சி ஆழும் குழியில்
வீறுகொண்ட தமிழர் அவர் பாதை மாறும் விரைவில்
ஏறுகின்ற கொடியில் புலி பறந்து நிற்கும் திமிரில்
எழடா தமிழா!
மௌனப் போரில் அனலை மூட்டும்
ஈழத் தலைமை வித்தகனே!
மானத் தமிழர் மரபைக் காக்க
மறத்தை ஏற்றும் செவ்வேளே!
காலம் கனியும் நேரம் தன்னில்
சீறிப் பாயும் கூர்வேலே
ஞாலம் தன்னில் புலியின் கொடியை
ஏற்றி நிமிர்வான் தலைமகனே!
பாதை மாறும் தமிழர் இனி வேங்கை வழியில் வாரும்
நாளை மாறும் விதியில் புலி ஈழம் தன்னை ஆளும்
ஒன்று சேரும் கொடியில் பலம் ஊறி நிற்கும் விடிவில்
நம்மை ஆளும் தலைமை நமதாகி நிற்கும் முடிவில்
எழடா தமிழா!