தடையையும் மீறி பல்கலைக்ழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் ஆரம்பமானது - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, November 27, 2019

தடையையும் மீறி பல்கலைக்ழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் ஆரம்பமானது

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரா் நினைவு துாபியில் மாவீரா் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
தடைகளையும் மீறி இன்று (வியாழக்கிழமை) காலை 50 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்று இந்த நிகழ்வுகளை மேற்கொண்டு வருவதாக  எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, பல்கலைக்கழக வாளாகத்துக்குள் மேலும் பல மாணவர்கள் நுழைய முற்பட்டதையடுத்து வாயிலில் அசாதாரண நிலை தற்போது தோன்றியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு நிர்வாகத்தால் தடை விதித்து உத்தரவு வழங்கப்பட்ட நிலையில் மாணவர்கள் இவ்வாறு படலையை உடைத்து உள்நுழைந்துள்ளனர்.
தமிழீழ மாவீரா் நாள் நினைவேந்தல் வடக்கு, கிழக்கு மற்றும் புலம்பெயா் தேசங்களில் உணா்வுபூா்வமாக அனுட்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.