சிவமோகனா? விசமோகனா?: வாங்கிய காசுக்கு கூவுகிறார் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, November 7, 2019

சிவமோகனா? விசமோகனா?: வாங்கிய காசுக்கு கூவுகிறார்

தென்பகுதி எங்கும் பரவலாக இந்து கோவில்கள் இருக்கின்றன: வடக்கு- கிழக்கில் வணக்கத்திற்காகவே பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு சஜித் பிரேமதாச காரணமல்ல என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகிறது என்பது மத ரீதியாக அரசியலுக்காக பாவிக்கப்படும் விடயம் எனத் தான் நான் பார்க்கின்றேன். வெளிப்படையாக தமிழ் மக்கள் வாழும் வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் பௌத்த விகாரை பொது மக்களின் இடங்களில் கட்டப்பட்டிருக்கின்றதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். மாங்குளத்தில் ஒன்று உண்டு. அதுவும் முகாம்களின் உள்ளே தான் உள்ளது. ஏனைய இடங்களில் கட்டப்பட்ட விகாரைகள் அனைத்தும் முழுமையாக முகாம்களின் உள்ளே தான் உள்ளது. அவை வணக்கத்திற்காகவே கட்டப்பட்டது.
அவை மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் கட்டப்பட்டவை. அவர்கள் தங்களுடைய வணக்கத்திற்காக அவற்றை கட்டியுள்ளார்கள் என்பது உண்மை தான். அதேநேரம் இன்று அனுராதபுரத்தை எடுத்தால் எமக்கு அங்கு சைவக் கோவில் இருக்கிறது. தென்பகுதியை எடுத்தால் எங்கு போனாலும் அங்கு கோவில் இருக்கிறது. பதுளையில் உள்ள மலை ஒன்றில் எங்களுக்கான வணக்க கோவில் இருக்கிறது. பரந்துபட்டு சைவ மக்களுக்கான கோவில்களும் கொழும்பில் இருக்கிறது. எனவே, எல்லா இடமும் எங்களுக்கான கோவில்களும் இருக்கின்றன. பௌத்த பிக்குகள் ஆன்மீகத்தை போதித்தால் பிரச்சனை இல்லை. ஆனால் இன்று அரசியலில் இறங்கியுள்ளமையால் தான் பிரச்சனை.
தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனவளப் பிரிவு, மகாவலி அபிவிருத்தி, இராணுவம் இந்த 5 பிரிவுகளும் தமிழர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் திணைக்களங்கள் என்பது உண்மை. இங்கு இருக்கும் அதிகாரிகள் அனைவரும் சிங்களவர்களாவே இருக்கிறார்கள். நீராவியடி விவகாரம் மஹிந்த ராஜபக்சவின் 52 நாள் காலத்தில் இடம்பெற்றது.
சஜித் பிரேமதாச காரணமல்ல. தற்போது ஓமந்தை மாளிகைப் பகுதியில் தொல்பொருள் திணைக்களம் பிரச்சனை எடுக்கும் போது சஜித் பிரேமதாச ஒரு வேட்பாளர். அவர் தலையிடவில்லை. வெடுக்குநாறி ஆலய பிரச்சனைக்கு காரணம் பொலிசாரே. சஜித் பிரேமதாச அல்ல. சஜித் பிரேமதாச வட்டுவாகல் வந்த போது ஒரு கோரிக்யை முன்வைத்தோம்.


நந்திகடலை ஆழப்படுத்த நிதி வந்துள்ள போதும் வனஜீவராசிகள் திணைக்களம் அனுமதி தரவில்லை. இதை தீர்த்து வைக்குமதாறு கோரினேன். அதற்கு அவர் தற்போது சொன்னால் அவர்கள் செய்கிறார்களோ தொயாது. ஆனால் நான் ஜனாதிபதி தேர்தலில் இறங்கி வெல்வேன். நவம்பர் மாதம் வென்ற பின் ஆழப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக சொன்னார். ஆகவே டிசம்பர் மாதமே சஜித் பிரேமதாச தொடர்பில் என்னால் கூற முடியும் எனத்தெரிவித்தார்.