முன்னாள் கடற்படை தளபதி உட்பட 14 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, November 11, 2019

முன்னாள் கடற்படை தளபதி உட்பட 14 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் 13 பேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டில் பதினொரு இளைஞர்களைக் கடத்திய சம்பவம் தொடர்பாக இவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அதன் அடைப்படையில் இன்று (திங்கட்கிழமை) குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்கென ட்ரயல் அட் பார் விசாரணைக்குழுவை நியமிக்குமாறு சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா பிரதம நீதியரசரை கோரியுள்ளார்.

2008 – 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு மற்றும் சுற்றுப் புறங்களில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அண்மையில் அறிக்கைகளை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.