புலிகளின் ஆயுதங்களை தேடும் அதிரடி படை! - Kathiravan - கதிரவன்

Breaking

Thursday, October 24, 2019

புலிகளின் ஆயுதங்களை தேடும் அதிரடி படை!

கிளிநொச்சி - வட்டக்கச்சி பகுதியில் புலிகளால் பதுக்கி வைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து விசேட அதிரடிப்படையினரால் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து வட்டக்கச்சி விவசாய பண்ணைக்கு அண்மையில் உள்ள காணி ஒன்றிலேயே குறித்த அகழ்வு பணிகள் இன்று (24) பகல் தொடங்கியது.

குறித்த காணியில் புலிகளின் முகாம் ஒன்று அமைந்திருந்தது. குறித்த முகாமில் புலிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் அடங்கிய கொள்கலன் இருப்பதாக விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த பகுதியில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த பகுதியை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பார்வையிட்டு அனுமதி வழங்கியதன் பின்னர் குறித்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது