கோட்டாபய ராஜபக்ஷவை தோற்கடிக்க சஜித் பிரேமதாசவினால் ஒருபோதும் முடியாதென மக்கள் விடுதலை முன்னணி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
காலியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேசிய மக்கள் சக்தியினால் மாத்திரமே முடியுமெனவும் டில்வின் சில்வா கூறியுள்ளார்.
இதேவேளை கோட்டாபய ராஜபக்ஷவை தோற்கடிக்கவும் தேசிய மக்கள் சக்தியினாலேயே முடியுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.