யாழ்.கொக்குவில்- கருவேலடி ஒழுங்கையில் பகல்வேளையில் வீட்டை உடைத்து உட்பு குந்த கொள்ளையா்கள் வீட்டிலிருந்த தாலிக்கொடி உள்ளிட்ட 15 பவுண் நகைகளை கொள்ளையிட்டு தப்பி சென்றிருக்கின்றனா்
பல்கலைக் கழக விரிவுரையாளர் ஒருவருடைய வீட்டிலேயே இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. நேற்று காலை 10 மணிக்கும் 11 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உட்புகுந்த திருடர்கள்
சாமி அறையை உடைத்து உட்புகுந்து சகல இடங்களும் சல்லடையிடப்பட்டு தேடுதலில் ஈடுபட்டுள்ளதோடு படுக்கை அறையில் இருந்த அலுமாரிகள் உடைக்கப்பட்டு தேடுதல் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது 11 பவுண் தாலிக்கொடி மற்றும் காப்பு உள்ளிட்ட 15 தங்கப்பவுண் நகைகளும் ஒரு தொகைப் பணமும் களவாடப்பட்டுள்ளது. இதேநேரம் 11 மணியளவில் இது தொடர்பில் 119 மற்றும்
யாழ்ப்பாணம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் 2 மணியளவில் வருகை தந்த பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்