கொள்ளைக்கும்பல் தலைவியாக செயற்பட்டு வந்த யுவதி கைது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, October 31, 2019

கொள்ளைக்கும்பல் தலைவியாக செயற்பட்டு வந்த யுவதி கைது!

அறைகளை வாடகைக்கு பெற்று தங்கியிருந்து அந்த வீடுகளில் திருட்டுக்களில் ஈடுபட்டு வந்தார் என பொலிசாரால் குற்றம்சுமத்தப்பட்ட யுவதியை விளக்கமறியலில் வைக்க, அத்தனகல்ல நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வேலைக்கு செல்வதாக குறிப்பிட்டு, பல இடங்களில் அறைகளை வாடகைக்கு பெற்று திருட்டுக்களில் ஈடுபட்டு வந்தார் என்றும், இந்த யுவதி ஒரு கொள்ளைக்கும்பலின் தலைவியாக செயற்பட்டார் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அமிதிரிகல ட்விஷந்த்வத்தவை சேர்ந்த வீரகூன் முதியன்சலேஜ் ரம்யாவதி குமரிஹாமி என்ற யுவதியே விளக்கமறியலில் வைக்கப்பட்டள்ளார்.

50 ஆயிரம் ரூபா மதிப்புள்ள தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில் சந்தேக நபரை நிட்டாம்புவ பொலிசார் கைது செய்துள்ளனர்.

விசாரணைகளின்போது, அறைகளை வாடகைக்கு பெற்று திருட்டில் ஈடுபடுவது தெரிய வந்தது.

கொள்ளைக்கும்பலொன்றின் தலைவியாகவும் செயற்பட்டுள்ளார். அவர் தலைமையல் கண்டியில் நடந்த திருட்டு தொடர்பாக, கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.