கோட்டாபய வென்றால் இலங்கையில் சர்வாதிகார ஆட்சி ஏற்படும்: யாழில் எச்சரித்தார் சிறிதுங்க ஜெயசூரிய! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, October 19, 2019

கோட்டாபய வென்றால் இலங்கையில் சர்வாதிகார ஆட்சி ஏற்படும்: யாழில் எச்சரித்தார் சிறிதுங்க ஜெயசூரிய!

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள பிரதான கட்சிகள் பிரதேச சபை தேர்தல்களில் பேசுவது போல மக்களுக்கு உப்புச் சப்பில்லாத விடயங்களை பேசி வருகின்றனர். இவர்களினால் மக்களுக்கு எவ்வித முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை என ஐக்கிய சோஷலிச கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி வேட்பாளருமாகிய சிறிதுங்க ஜெயசூரிய தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் இன்று (19) சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தலில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களின் தேர்தல் பிரசாரத்தின் போது மக்களுக்கு சில உறுதிமொழிகளை வழங்கி வருகின்றனர்.ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசா மக்களின் பிரச்சனைகுகு ஒருநாளில்,ஒரு மாதத்தில் என பல கதைகளை மேடைகளில் கூறி வருகின்றார்.

இன்னொரு பக்கத்தில் பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தாம் வெற்றி பெற்றால் சிறையில் உள்ள இராணுவத்தை அடுத்த நாளில் விடுதலை செய்வேன் என கூறுகின்றார். இதன் பிரகாரம் பார்த்தால் நாட்டில் சர்வாதிகார ஆட்சியே ஏற்படும்.

இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் கல்வி,சுகாதாரம் மக்களின் இதர பிரச்சனைகள் பற்றி கதைப்பதாக இல்லை. குறிப்பாக தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்து பேசாது உள்ளனர். இவர்கள் மட்டுமன்றி ஜேவிபியியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க நாட்டில் உள்ள அனைவரும் சமம் எனக் கூறி அரசியல் தீர்வு குறித்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்த வேட்பாளர்களிடம் நாட்டு மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான எவ்வித திட்டமும் இல்லை.சாதாரண பிரதேச சபை தேர்தல் போன்று ஜனாதிபதி தேர்தலில் பேசி வருகின்றனர்.எனவே ஜனாதிபதி தேர்தலில் மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.சஜித்,கோத்தபாயவால் மக்களுக்கு தீர்வு ஏற்படப்[போவதில்லை.

எனவே மாற்றத்திற்காக ஐக்கிய சோஷலிச கட்சியில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளரை வெற்றியடைய செய்ய முச்சக்கர வண்டி சின்னத்திற்கு வாக்களித்து ஆதரவு வழங்க வேண்டும் என்றார்.