குடியுரிமையை பெற்றது சட்டபூர்வமானது; கோட்டா தேர்தலில் போட்டியிடலாம்: மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, October 4, 2019

குடியுரிமையை பெற்றது சட்டபூர்வமானது; கோட்டா தேர்தலில் போட்டியிடலாம்: மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச இலங்கை குடியுரிமையை பெற்றது சட்டபூர்வமற்றதென தீர்ப்பளிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. . இதன்மூலம், ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய போட்டியிடுவதில் எந்த சட்டரீதியான சிக்கலும் இல்லாமலாகியுள்ளது.

பேராசிரியர் சந்தரகுப்த தேனுவர, காமினி வெயங்கொட ஆகியோர், கோட்டாபயவின் குடியுரிமையை சவாலுக்குட்படுத்தி இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

முறையற்ற விதத்தில் அவர் குடியுரிமையை பெற்றதாக அவர்கள் மனுத்தாக்கல் செய்திருந்தார்கள். நேற்றும் இன்றும் நடந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து, சற்று முன்னர் இந்த தீர்ப்பளிக்கப்பட்டது.

மேன்முறையீட்டு தலைமை நீதிபதி யசன்த கோதாகொட, அர்ஜுன ஒபேசேகர மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பையளித்தது