ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தனக்கு முதுகெலும்புள்ளது என்பதை நிரூபித்துள்ளதாகவும் முடியுமானால் சஜித் பிரேமதாசவும் நிரூபிக்கட்டும் எனவும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
அவிசாவலையில் இன்று (07) தினேஸ் குணவர்தனவின் கட்சியினால் ஏற்பாடு செய்த கோட்டாபய ஆதரவுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
ரணில் விக்ரமசிங்க இன்று தான் ஜனாதிபதி வேட்பாளராக வருவதாக அறிவித்துள்ளார். அவருக்கு அந்த பலம் இருக்கின்றது. சஜித் பிரேமதாசவும் முடியுமானால் இவ்வாறு அறிவிக்கட்டும்.
அவர் இவ்வாறு அறிவிப்பாரா? அல்லது ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பின்னர் பிரதமர் பதவியை தருவதாக கூறியவுடன் ரணிலின் வலையில் விழுவாரா? எனவும் பொறுத்திருந்து பார்ப்போம்.
எமக்கு தனியாக வந்தாலும் சரி,சேர்ந்து வந்தாலும் சரி ஒரு பொருட்டல்ல. வெற்றி பெறுவது நிச்சயம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.