முகமாலையில் மனித எலும்புகள்,மற்றும் எச்சங்கள் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, September 12, 2019

முகமாலையில் மனித எலும்புகள்,மற்றும் எச்சங்கள்



கிளிநொச்சி முகமாலை வடக்குப் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மீட்புப் பணியின்போது கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் மனித எலும்புகள், எச்சங்கள் சிலவற்றைக் கண்டெத்துள்ளனர்.

கண்ணிவெடி அகழ்வுப் பணியில் ஈடுபடும் சர்வதேசத் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் வழமைபோன்று அகழ்வுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது நண்பகல் அளவில் மனி எலும்புகள், எச்சங்களைக் கண்டதாகத் தெரிவித்தனர்.

இதனையடுத்து பளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த இலங்கைப் பொலிஸார் மனிச எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பாகக் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டனர்.

அதோடு மீட்கப்பட்ட மனித எச்சங்களையும் அவர்கள் பார்வையிட்டு சென்றுள்ளனர்.