அனுராபுரம் கெக்கிராவ நீதிமன்றத்தில் சற்று முன்னர் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமைகம் தெரிவித்துள்ளது.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு பிரிவினருக்கு சொந்தமாக வாகனங்கள் நீதிமன்ற கட்டடத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
வழக்கு விசாரணை அறிக்கைகளை வைக்கும் அறையிலேயே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
விசாரணைக்காக பொலிஸ் குழுக்கள் சிலவற்றை அந்த பகுதிக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரச பகுப்பாய்வு குழுவினரும் அந்த இடத்திற்கு அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாட்சியங்களை அழிக்கும் வகையில் இவ்வாறு அறிக்கைகளை பாதுகாக்கும் அறைக்கு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.