ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக சரத் பொன்சேகா? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, September 12, 2019

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக சரத் பொன்சேகா?இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக சரத் பொன்சேகா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக கடமையாற்றியுள்ளார்.
   
அமைச்சரவை அந்தஸ்தற்ற ஊடக அமைச்சர் ருவான் விஜேவர்தன, ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவரை நியமித்த விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டு நிலைமைகளைத் தொடர்ந்து,

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.