சமகால அரசாங்கத்தின் பிரபல அரசியல்வாதி ஒருவர் விசேட வரம் வேண்டி யாகம் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று முன்தினம் நள்ளிவரவு குறித்த பிரபலம் இந்த யாகத்தை நடத்தியுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.
இந்த யாகத்தில் உள்ளூராட்சி சபையின் இளம் உறுப்பினர் ஒருவர் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக பாதுகாப்பாளர்கள் மற்றும் மிக நெருக்கமான பெண் உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த யாகம் சில வருடங்களாக நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பிரபலம் இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.