கொன்று சாக்குமூட்டையில் அடைக்கப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட உடல்.. கணவரே கொன்றது அம்பலம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, August 30, 2019

கொன்று சாக்குமூட்டையில் அடைக்கப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட உடல்.. கணவரே கொன்றது அம்பலம்தமிழ்நாட்டில் மனைவியை கொலை செய்து சடலத்தை மூட்டையில் கட்டி கிணற்றில் வீசிவிட்டு நாடகமாடிய கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சியில் உள்ள ஆர்.பொன்னாபுரம் என்ற இடத்தில் வசித்து வருபவர் சக்திவேல். கூலி வேலை செய்துவரும் இவருக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆன நிலையில் மனைவி கவுசல்யா மற்றும் 7 வயது மகளுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கவுசல்யாவை காணவில்லை என்று பொள்ளாச்சி காவல் நிலையத்தில் சக்திவேல் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரை ஏற்று விசாரணை நடத்திய பொலிசார் கவுசல்யாவை தீவிரமாக தேடி வந்தனர்.

விசாரணையில் கணவன், மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும் அடிக்கடி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதும் தெரியவந்தது.

இதை தொடர்ந்து சக்திவேல் மீது சந்தேகம் அடைந்த பொலிசார் அவரை கைது செய்து கிடுக்குபிடி விசாரணை நடத்தினர்.

அப்போது கவுசல்யா மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கடந்த யூலை 26 ஆம் திகதி அவரை கொலை செய்து சாக்கில் கட்டி கிணற்றில் வீசியதாக சக்திவேல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து கவுசல்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய பொலிசார் இது குறித்து மேலும் சக்திவேலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்