முல்லைத்தீவு மாவட்டத்தின் கணுக்கேணி பிரதேசத்தை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவரான திருஞானசம்பந்தர் வாசீசன் என்பவர் முள்ளிவாய்க்காலில் 14.04.2009 அன்று காணாமல் ஆக்கப்பட்டார்.
இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தமது மகனைத் தேடி கடந்த பத்து வருடத்திற்கு மேலாக தாயும் தந்தையும் அலைந்து திரிந்ததுடன் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர்.
மகன் காணாமற் போன வேதனையில் ஆழ்ந்த கவலையிலிருந்த தந்தையார் பொன்னுத்துரை திருஞானசம்பந்தர் கொடூர வீதி விபத்தில் சிக்குண்டு சம்பவ இடத்திலேயே மரணமானார்.
இந்த விபத்தில் தாயாரும், சகோதரியும் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார்கள்.
இதேவேளை, வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இன்று வருவார்கள் நாளை வருவார்கள் என்ற ஏக்கத்துடன் இதுவரை 35 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளார்கள்.
இந்நிலையில் மீண்டுமொரு உயிர் வீதி விபத்தில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் மிகவும் வேதனையடைந்துள்ளார்கள். உயிர்கள் போனாலும் இந்த அரசு தமக்கான நீதியை பெற்றுதருவதற்கு எண்ணவில்லை என்ற ஏக்கத்தில் தவிக்கிறார்கள்.