இன்பத்துக்காக பெண்களை விட்டு விட்டு பொம்மைகளை நாடும் ஆண்கள்: ஒரு எச்சரிக்கை செய்தி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, August 30, 2019

இன்பத்துக்காக பெண்களை விட்டு விட்டு பொம்மைகளை நாடும் ஆண்கள்: ஒரு எச்சரிக்கை செய்தி!அதிகரித்து வரும் நிலையில், அவற்றால் உயிருக்கே ஆபத்து நேரிடலாம் என எச்சரித்துள்ளார் பொம்மைகளை சேகரிக்கும் நிபுணர் ஒருவர்.

தற்போது கணினியால் இயக்கப்படும் பாலியல் பொம்மைகள் பல நாடுகளிலும் அதிகரித்து வருகின்றன.

அதே நேரத்தில், அது கணினியால் இயக்கப்படுவதே பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்கிறார் Brick Dollbanger என்னும் பொம்மைகளை சேகரிக்கும் நிபுணர்.

ஏனென்றால் அந்த பொம்மைகள் முறையாக பராமரிக்கப்படாத பட்சத்தில் அவற்றின் மென்பொருள்களில் ஏற்படும் சிறு தவறு கூட அவற்றை மாற்றி விடலாம் என்கிறார் அவர்.

இழுத்த இழுப்புக்கெல்லாம் மறு பேச்சு பேசாமல் வரும் என்று எண்ணும் பொம்மைகள், பிறகு முரட்டுத்தனமாக மாறிவிடலாம் என்கிறார் Brick.

அவை எந்த அளவுக்கு முரட்டுத்தனமாக மாறும் என்றால், உங்களை அது அணைக்கும்போது ஒரு பிரச்னை ஏற்படும் என்று வைத்துக் கொள்வோம், அது உங்களை இறுக்கி அணைத்து, உங்கள் நெஞ்சை அழுத்தி, உங்கள் மூச்சு நிற்கும் வரைக்கும் அது உங்களை விடப்போவதில்லை.

அவை செயற்கை இழைகளால் செய்யப்பட்டவை என்பதால் , மனிதனை விட மிக உறுதியானவையாக, வலிமையானவையாக இருக்கும்.

சினிமாவில் காட்டுவது போல், அவற்றை அடித்து வீழ்த்துவதோ, அல்லது அவற்றிடமிருந்து தப்புவதோ அவ்வளவு எளிதாக இருக்காது. வேண்டுமானால் துப்பாக்கியால் சுட்டு அதன் இயக்கத்தை வேண்டுமானால் நிறுத்த முயற்சி செய்யலாம் என்கிறார் Brick.