திருகோணமலை – குச்சவௌி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குச்சவௌி – மதுரங்குடா பகுதியில் நேற்றிரவு 8.15 மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவரை குச்சவௌி வைத்தியசாலையில் அனுமதித்ததை அடுத்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளா்.
இதில் 40 வயதான ஒருவரே கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
சடலம் குச்சவௌி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை பேருவளை – கரதகொட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக 27 வயதான இளைஞன் கொலை செய்யப்பட்டுள்ளாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.