ஜனாதிபதி வேட்பாளராக குப்பை ராணி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, August 29, 2019

ஜனாதிபதி வேட்பாளராக குப்பை ராணி!

நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா சோசலிசக் கட்சி பெண் வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது.

பிரபல சூழலியலாளரான கலாநிதி அஜந்தா பெரேரா என்பவரே, சோசலிச சட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த அஜந்தா பெரேரா?
ஜேர்மனியில் பயிற்சி பெற்ற சுற்றுச்சூழல் விஞ்ஞானியான கலாநிதி அஜந்தா பெரேரா, இலங்கையில் முறையான கழிவு முகாமைத்துவத்துக்காக போராடி வருகிறார்.

குப்பை சேகரிப்பாளர்களுடனான அவரது பணிக்காக, அவர் “குப்பை ராணி” என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

20 ஆண்டுகளுக்குப் பின்னர், முதல் முறையாக இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் பெண் ஒருவர் போட்டியிடவுள்ளார்.

கடைசியாக, 1999ஆம் ஆண்டு, சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக வெற்றி பெற்றிருந்தார்.

அதன் பின்னர் 2019 நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் அஜந்தா போட்டியிடவுள்ளமை 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு பெண் வேட்பாளர் களம் இறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது