சம்பவம் இடம்பெறாமல் இருக்கவே நல்லூரில் பலத்த பாதுகாப்பு - இராணுவத் தளபதி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, August 14, 2019

சம்பவம் இடம்பெறாமல் இருக்கவே நல்லூரில் பலத்த பாதுகாப்பு - இராணுவத் தளபதி


நல்லூர் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் பாதுகாப்புக் குறித்து அச்சமடையத் தேவையில்லை என்று இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (14) நல்லூர் ஆலயத்திற்கு விஜயம் செய்து பாதுகாப்பு தொடர்பில் ஆராய்ந்த போதே இதனைத் தெரிவித்தார்.

மேலும்,

பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பொலிஸார், இராணுவத்தினர், கடற்படையினர், விமானப் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளளனர்.

சம்பவம் ஒன்று இடம்பெறாமல் இருக்கவே இவற்றை முன்னெடுத்துள்ளோம்.

உயிர்த்த ஞாயிறு நிலைமை இப்போது காணப்படவில்லை எனக் கூற முடியாது. தனிமைப்படுத்தப்பட்ட ஓநாயினால் எதையும் செய்ய முடியும். ஒரு பைத்தியத்தினால் என்னவும் செய்ய முடியும். அவற்றைத் தடுக்கவே நாம் பாதுகாப்பு பணியில் இருக்கிறோம். என்றார்.