அஹங்கம பிரதேசத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
அஹங்கம பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹோட்டல் பாடசாலை ஒன்றை திறப்பதற்காக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் , இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரண, பிரதி அமைச்சர் கருணாரத்ன பரனவிதான ஆகியோர் வரவிருந்த நிலையில், அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வருகைக்கு எதிராக பிரதேசவாசிகள் இவ்வாறு எதிர்ப்பில் ஈடுபட்டனர்