வெள்ளை வான் கலாசாரத்தை தாமே ஒழித்தார்களாம்! - Kathiravan - கதிரவன்

Breaking

Friday, August 9, 2019

வெள்ளை வான் கலாசாரத்தை தாமே ஒழித்தார்களாம்!

இந்த மாத இறுதிக்குள் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணி கட்டியெழுப்பப்படும் என்று சிறிலங்கா  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் உறுதியளித்துள்ளார்.

ஜனநாயக்கத்தை வலுப்படுத்தி முன்னோக்கி செல்வதுடன், புதிய கருத்துகளுடன் கூட்டணி அமைக்கப்பட வேண்டும் என, அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டில் இன்று கூட்டணி அரசியல் தோற்றம் பெற்றுள்ளதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பிரதானமாக மூன்று கூட்டணிகள் உருவாக்கப்படும் என்று தான் நினைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவளை, இன்று நாட்டில் ஜனநாயகத்தை கட்டியெழுப்பி வெள்ளை வான் கலாசாரத்தை இல்லாது செய்துள்ளதாக தெரிவித்த பிரதமர், அதன் காரணமாகவே இன்று அரசாங்கத்தின் மீது தொலைக்காட்சி விவாதங்களில் பகிரங்கமாக குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடிவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.