தொடரும் வடகொரியாவின் ஏவுகணைச் சோதனைகள்! - Kathiravan - கதிரவன்

Breaking

Friday, August 2, 2019

தொடரும் வடகொரியாவின் ஏவுகணைச் சோதனைகள்!வடகொரியா மற்றுமொரு குறுத்தூர ஏவுகணையை ஏவிப் தோதனை செய்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் இது மூன்றாவது ஏவுகணைப் சோதனை நடவடிக்கையாகும்.

நேற்று வெள்ளிக்கிழமை வடகொரியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியிலிருந்து ஒரு குறுந்தூர ஏவுகணை மட்டும் உந்தப்பட்டுள்ளது என தென்கொரியாவின் கூட்டுப்படைகளின் தளபதி ஜோனி கூறியுள்ளார்.

இந்த ஏவுகணைப் சோதனைகள் தென்கொரியா அமெரிக்காவும் இணைந்து நடத்தப்படும் கூட்டு இராணுவப் பயிற்சிகளை கண்டிக்கும் வகையில் இச்சோதனைகள் நடத்பட்டுள்ளன என ஆய்வாளர்களால் பார்க்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் வடகொரியாவால் இரண்டு ஏவுகணைகள் உந்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது.

வடகொரியாவின் ஏவுகணைச் சோதனைகளுக்கு பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன.

ஆனால் வடகொரியாவின் ஏவுகணைச் சோதனைகள் குறித்து அமொிக்காவுக்கு எந்தவொரு கவலையும் இல்லை என அதிபர் டொனால்ட் டிரப் கூறியுள்ளார்.