வவுனியாவில் 917ஆவது நாட்களாக தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளாலேயே இந்தப் போராட்டம் இன்று (சனிக்கிழமை) நடத்தப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் ஓ.எம்.பி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதற்கும் பளை வைத்தியசாலையின் வைத்தியர் சிவரூபன் கைது செய்யப்பட்டதற்கும் தமது எதிர்ப்பினைத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஒரு மணி நேரம் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.
வெளியேறு வெளியேறு ஓ.எம்.பி வெளியேறு, விடுதலை செய் விடுதலை செய் மருத்துவரை விடுதலை செய், எங்கே எங்கே எமது உறவுகள் எங்கே? வேண்டும் வேண்டும் எமது உறவுகள் வேண்டும்....
உறவுகளை மீட்க சர்வதேசம் வேண்டும், போன்ற கோசங்களை எழுப்பியவாறும் அமெரிக்கா, ஜரோப்பிய கொடிகளைத் தாங்கியவாறும் கதறி அழுது போராட்டத்தில் அவர்கள் ஈடுப்பட்டிருந்தனர்.