கிழக்கு மாகாண அபிவிருத்திக்காக 7,346 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, August 29, 2019

கிழக்கு மாகாண அபிவிருத்திக்காக 7,346 மில்லியன் ரூபா ஒதுக்கீடு



கிழக்கு மாகாண அபிவிருத்திக்காக 7,346 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. 

அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்கள் மூன்றிலும் இந்த அபிவிருத்தி திட்டங்களுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளன. 

அதற்கமைய இடம்பெயர்ந்த மற்றும் அகதிகளாக மீளவும் குடியமர்த்தப்பட்ட மக்களுக்காக 1772 வீடுகள் நிர்மாணிக்கவுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதற்காக ஆயிரத்து 772 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இவற்றில் பல வீடுகள் தற்போது பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதோடு, ஏனைய வீடுகள் இந்த வருடத்திற்குள் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது. 

மேலும் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக்காக 920 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.