பளை வைத்திய சாலையின் பெறுப்பதிகாரி வைத்தியர் சிவரூபன் கைது செய்யப்பட்டமை தொடர்பில் மேலும் 3 பேர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பளை பகுதியை சேர்ந்த கராஜ் உரிமையாளர் மற்றும் கூலித் தொழிலாளர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
வைத்தியரிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள் குறித்து விசாரணை நடத்தவே இவர்கள் கைது செய்யப்பட்டதாக அறியமுடிந்தது.