சுவிஸ்ஸில் இருந்து வந்த நபர் தாக்குதலுக்குள்ளான சம்பவமொன்று குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுயில் இடம்பெற்றுள்ளது.
சுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் யாழ்ப்பாணம் நாவந்துறை பகுதியில் மோட்டார் சைக்கிள் கடைக்கு சென்று மெக்கானிக்கிடம் தனது மோட்டார் சைக்கிளை திருத்த எவ்வளவு முடியும் என கேட்டுள்ளார், அதற்கு அவர் முழுமையாக 33 ஆயிரம் முடியும் என்று கூறி கணக்கு எழுதி கொடுத்துள்ளார். அப்போது உடனடியாக பத்தாயிரம் ரூபாய் முன்பணத்தை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.
தொடர்ந்து மறுநாள் சுவிஸ் நபரை சந்தித்த மோட்டார் சைக்கிள் மெக்கானிக் அனைத்து செலவுகளுக்குமான கணக்கு கொடுத்தால் பின்பும், கூடுதல் பணம் கேட்டுள்ளார், அப்போது அவர் நீங்கள் 33 ஆயிரம் என்றுதானே கூறினீர்கள் நான் 10 ஆயிரம் முன்பணம் தந்துவிட்டேன் என்னும் 23 ஆயிரம் தந்தால் சரியென கூறியுள்ளார்.
அப்போது மெக்கானிக் உட்பட்ட குழுவினர் நாங்கள் கேட்ட பணத்தை தா வெளிநாட்டிலிருந்து வந்த உன்னிடம் காசு இல்லையா என மிரட்டிக்கொண்டு இரும்பு கம்பியால் சுவிஸ்சிலிருந்து வந்த யாழ்ப்பாணத்தவரை கடுமையாக தாக்கியதில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சொந்த நாட்டை விட்டு உறவுகளை விட்டு வெளிநாடு சென்று கஸ்ரப்பட்டு உழைத்து விட்டு சொந்த நாட்டுக்கு திரும்பிவந்தால் அவர்கள் ஏதோ வெளிநாடுகளில் வீதிகளிலிருந்து காசை அள்ளிக்கொண்டுவருவதுபோல் சிலர் நினைத்துக்கொண்டு அவர்களிடம் பணம் புடுங்கும் வேலையை ஈழத்தில் உள்ள சிலர் மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.