யாழ்.பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜுலை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, July 23, 2019

யாழ்.பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜுலை!

தமிழர்கள் மீதான இன அழிப்பு முனைப்பு பெற்ற ஜீலை படகொலை பற்றி தமிழ் அரசியல் தரப்புக்கள் திருட்டு மௌனத்துடன் கண்டுகொள்ளாதிருக்கின்ற நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வு இன்று மதியம் நடைபெற்றுள்ளது.

சிறிலங்காவில் தனித்தான பண்பியல்புகளைக் கொண்டதான இரு வேறு இனக்குழுமங்கள் வாழ்ந்து வருகின்றதென்பதன் இரத்த சாட்சியமே கருப்பு ஜூலையென்ற அடையாளத்துடன் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் இணைந்து கறுப்பு ஜீலையினை நினைவுகூர்ந்தனர்.

இதனிடையே டெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் குட்டிமணி தங்கத்துரை உள்ளிட்ட வெலிக்கடை தியாகிகளை நினைவு கூர்ந்திருப்பதுடன் அவர்களிற்கு கண்ணீர் அஞ்சலியும் செலுத்தியுள்ளது.