கதிர்காமத்திலிருந்து பயணிகளை ஏற்றி வந்த பேருந்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, July 9, 2019

கதிர்காமத்திலிருந்து பயணிகளை ஏற்றி வந்த பேருந்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்



அம்பாறை பொத்துவில் றொட்டை வயல் பிரதேசத்தில் இ.போ.ச பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி வயல் பிரதேசத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பஸ் கதிர்காமத்திலிருந்து பயணிகளை ஏற்றுக் கொண்டு நேற்று இரவு அக்கரைப்பற்று நகருக்குச் சென்று பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் இன்று அதிகாலை 5.30 மணியளவில் பொத்துவில் நகரை நோக்கிப் பயணித்துக் கொண்டு இருந்த வேளை வீதியை விட்டு விலகி வயலுக்குள் பாய்ந்துள்ளது.

விபத்து இடம்பெற்ற வேளை சில பயணிகள் இருந்துள்ள போதும், அவர்களிற்கு ஏதும் அனர்த்த நிகழவில்லை.

இதேவேளை பேருந்து சாரதிக்குக் காலில் காயம் ஏற்றுப்பட்டுள்ளது.

அத்துடன் சாரதியின் பக்கம் பஸ் சேதடைந்துள்ளதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தன.


இந்நிலையில் இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.