பெலியத்தை - மொராகாஹேன வீதியில் உள்ள சந்தியொன்றில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று அதிகாலை 1.35 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிகாலை பெலியத்தை - மொராகாஹேன வீதியில் பயணித்த முச்சக்கர வண்டியொன்றின் மீதே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மெற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்
இச்சம்பவத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி பெலியத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந் நிலையில் இது தொடர்பான விசாரணைகளை பெலியத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.