உடைந்தது ரிசாத்தின் கட்சி! வெளியேறுகிறார் அமீர் அலி? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, July 29, 2019

உடைந்தது ரிசாத்தின் கட்சி! வெளியேறுகிறார் அமீர் அலி?


கடந்த சில நாட்களாகவே உச்சமடைந்துள்ள இந்த குழப்பத்தின் விளைவாகவே, கட்சியின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப்பின் வாகனத்தின் மீது தாக்குதல் நடந்தப்பட்டதாகவும் தெரிகிறது.

ரிசாத் பதியுதீனின் தரப்பிலுள்ள மஹ்ரூப் எம்.பி, அமீர் அலியின் அதிருப்தியையடுத்து அந்த பகுதிகளில் போட்டி அரசியல் மேற்கொள்ள முனைந்ததே தாக்குதலின் பின்னணியென தெரிவிக்கப்படுகிறது.

ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசிற்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாகவே நீடித்து வரும் இந்த பிளவை, வெளியில் தெரியாத விதமாக கட்சி மூடி மறைத்து வந்தாலும், அடுத்த ஒரு சில நாட்களில் பிளவு பகிரங்கமாகுமென தெரிகிறது.

அமீர் அலி, கட்சியிலிருந்து வெளியேறி தேசிய கட்சியொன்றில் இணைந்து கொள்ளலாமென தெரிகிறது.

அனேகமாக அது ஐ.தே.கவாக இருக்கலாம் எனவும் அதில் அவருக்கு அமைப்பாளர் பதவியும் வழங்கப்படுமென தெரிகிறது.

இதேவேளை, தேசிய அரசாங்கத்தின் மூலம் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை 48 வரை உயர்த்தலாம் என்பதால், முஸ்லிம் அமைச்சர்கள் பதவியேற்ற பின்னர், அமீர் அலி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக்கப்படுவார் என தெரிகிறது.