கன்னியா வெந்நீரூற்றுக்கு அருகில் திரண்டுள்ள மக்கள்! பொலிஸார் குவிப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, July 16, 2019

கன்னியா வெந்நீரூற்றுக்கு அருகில் திரண்டுள்ள மக்கள்! பொலிஸார் குவிப்புதிருகோணமலை - கன்னியா பிரதேசத்தில் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெறவிருந்த நிலையில் நீதிமன்றத்தால் அதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் திருகோணமலை - ஹொரவ்பொத்தான பிரதான வீதி, கன்னியா வெந்நீரூற்றுக்கு அருகில் அதிகளவிலான மக்கள் கூடி இருப்பதாக தெரியவருகிறது.

எனினும் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டிருப்பதுடன், கன்னியா வெந்நீரூற்றுக்கு செல்லும் வீதி மூடப்பட்டுள்ளது.

தற்பொழுதும் அதிகளவான மக்கள் கன்னியா பகுதியை நோக்கி வருகை தந்து வரும் நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவிலிருந்து கன்னியா நோக்கி வரும் வாகனங்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.


இதேவேளை போராட்டத்திற்கு செல்பவர்களையும், பேருந்துகளையும் பொலிஸார் புகைப்படங்கள் எடுத்து அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் அந்த இடத்தில் தற்பொது பதற்றமான சூழல் ஏற்பட்டுள்டளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல் மூலம் அறியமுடிகிறது.