குருநாகல் மருத்துவமனை மகப்பேற்று மருத்துவர் ஷாபி ஷிஹாப்தீன் சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
மருத்துவர் ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு குருநாகல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது மருத்துவர் ஷாபி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் வழக்கு விசாரணையை அடுத்து மருத்துவர் ஷாபி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது