செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் தங்கியிருக்கின்ற பௌத்த பிக்குவிற்கு ஒருபுறம் பாதுகாப்பு வழங்கிய காவல்துறை மறுபுறம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த - பெரும்பான்மை இனத்தவரான வழக்கறிஞர் ஒருவரின் வாகனத்திற்கும் விசேட பாதுகாப்பு வழங்கவேண்டியிருந்தது.
ஆலய வளாகத்தில் அடாத்தாக குடியிருக்கும் பௌத்த பிக்குவின் சட்ட விடயங்களை கையாளும் வழக்கறிஞர் ஒருவருடைய கார் அதுவென தெரியவந்துள்ளது.
பகல்பொழுது ஆலயத்திற்கு வந்திருந்த பக்தர்களிற்குகு அன்னதானம் வழங்குவதற்கு மரநிழலில் - நிலவிரிப்பிடுவதற்காக, இந்த வாகனத்தை சற்றே அகற்றி நிறுத்துவதற்கு விழா ஒழுங்கமைப்பாளர்கள் சுமார் அரைமணிநேரம் கடுமையாக முயற்சித்தனர்.
போலீஸ் பாதுகாப்புடன் வாகனம் அசையமறுத்து அங்கேயே நிற்க பாதிப்பேர் வெயிலில் அமர அன்னதானம் நடைபெற்றது.
இது அங்கு வந்திருந்த இந்து மக்களிடையே கடும் சீற்றத்தை தோற்றுவித்திருந்தது.