3G - 4G - 5G என்று அளக்கப்படுவது,
தரவேற்றம் & தரவிறக்கத்தின் வேகம்!
படித்தவற்றின் ஞாபகம் சரியாயின், “அலைக்கற்றையின் பட்டையின் அளவை குறிப்பவை” இவை.
தொலைத்தொடர்பு கோபுரங்களினை வைத்து கதைத்தால், கோபுரங்களிலிருந்து பிறப்பிக்கப்படும் “அலைச்செறிவை” வைத்து இந்த வேகம் மாறுபடும்.
ஒரு ஊரின் ஒரு மூலையில் 4Gவேகம் கிடைக்காமல் இன்னொரு இடத்தில் கிடைத்தால் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு அழைப்பெடுத்து சண்டை போட்டவர்களெல்லாம் உண்டு.
தொலைத்தொடர்பு சட்டங்களின் படி அனுமதி பெறப்பட்ட அளவுக்கு மேலதிகமாக குறித்ததொரு கோபுரத்திலிருந்து அலைச்செறிவை வெளியிடுவது, தண்டனைக்குரிய குற்றம். இலங்கையை பொறுத்தவரை தற்போதுவரை அலைச்செறிவு வரம்பு மீறலுக்கான அதிகபட்ச தண்டனை : “அபராதத்தொகை” தான்.
கோபுரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் / கோபுரங்களுக்கான வாடகைப்பணத்தை அதிகரிக்காமல் - வாடிக்கையாளர்களை அதிகரிப்பதற்காக, அலைச்செறிவை அதிகப்படுத்தி மாட்டிக்கொண்டு பெருமளவு அபராதம் செலுத்திய தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களெல்லாம் உண்டு?
அலைச்செறிவு நிரந்தரமாகவே அதிகரிக்கப்பட்ட கோபுரத்துக்கு மாதாந்த பரிசோதனைக்கு செல்லாமல் இருப்பதற்காக - நிரந்த மாதமாமூல் செலுத்தும் “மாமா” (பெரிய - பெரிய) டீல் எல்லாம் உண்டு.
அந்த டீல் காசுக்கும் சேர்த்து வாடிக்கையாளரின் மடியில் கைவிட்டு பிடுங்குபவர்களும் - சகஜம்!
அலைச்செறிவு இயற்கை சமநிலையை குழப்புகிறது என்பது உண்மை.
தேனீக்கள் - சிட்டுக்குருவிகள் - செண்பகம் ஆகிய கண்ணுக்கு தெரியும் சிற்றுயிர்கள் இந்த அலைச்செறிவினால் நேரடியாக பாதிக்கப்படுவன!
ஊரிலே சுகதேகியாக இருந்தவர்களின் திடீர் மரணங்களுக்கும் - அடையாளம் காணமுடியாத நோய்களுக்கும் கூட, அலைச்செறிவில் ஏதோவொரு பங்கிருக்கக்கூடும்?
5G - அவசரப்படுத்துமளவுக்கு, யாழ்ப்பாணமொன்றும் தொழில்நுட்ப நகரமல்ல!
ஆனால் - விவசாய கிராமங்களில் தங்கியிருக்கின்ற, வேளாண்மை விளைவித்து - விவசாய வருமானத்தால் சீதனம் குடுப்பித்து குடிபெருக்கி வாழ்கின்ற அன்றாடங்காய்ச்சிகளில் தங்கியிருக்கிற, விவசாய பொருளாதாரத்தில் ஏந்தப்பட்டிருக்கின்ற நகர்.
இந்த அலைச்செறிவு அதிகரிப்புக்கு பின்னாலிருக்கும், “ஒப்பந்த கையூட்டு”
- யாரோ ஒன்றிரண்டு அரசியல் பிச்சைக்காரர்களுக்கும்,
- அதிதுரித லாபமீட்டும் பெருமுதலாளித்துவ பணமுதலைகளுக்கும் அவசியமான உடன்படிக்கையின் பிற்சேர்க்கையாயிருக்கலாம்?
உழுதுண்ணும் யாழ்ப்பாணத்துக்கு #5G வேண்டாம்!!