இன்னும் 5 மாதத்தில் புதிய அரசு அமையும்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, July 16, 2019

இன்னும் 5 மாதத்தில் புதிய அரசு அமையும்!


எதிர்வரும் ஐந்து மாதங்களில் புதிய அரசை உருவாக்கும் வாய்ப்பு நாட்டு மக்களுக்குக் கிடைக்கும். இதன்போது தூய்மையான, நாட்டை நேசிக்கும், ஊழல், மோசடியற்ற உண்மையான அரசியல்வாதிகளைக் கொண்ட மனிதநேயமிக்க அரசொன்றை உருவாக்குவதற்காக மக்கள் தமது வாக்குப் பலத்தை உபயோகிப்பார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன்.”

– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

“வீழ்ச்சியடைந்துவரும் பொருளாதாரக் கட்டமைப்பையும் ஊழல், மோசடிகள்மிக்க தூய்மையற்ற அரசியலைக்கொண்ட இந்த நாட்டையும் கட்டியெழுப்புவதற்கான ஒரேயொரு மார்க்கம் உண்மையான அரசியல்வாதிகளைக் கொண்ட அரசு ஒன்றைத் தேர்ந்தெடுப்பதாகும். அதற்கான பொறுப்பு நாட்டு மக்களிடமே காணப்படுகின்றது” எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நுவரெலியாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சகல வசதிகளையும் கொண்ட புதிய மாவட்ட வைத்தியசாலையை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் நேற்றுக் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.