யாழில் ஆவா குழுவினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 27பேர் கைது செய்யப்பட்டு நீதின்றத்திற்கு முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மானிப்பாய் இணுவில் பகுதியில் பொலிஸ் சோதனை சாவடியில் உள்ள அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்த வந்து தப்பிச்சென்ற ஆவா கும்பலின் இரு உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளர்.
இதேவேளை கடந்த காலங்களில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புக்களின் போது பல இடங்களிலிருந்து ஆவா கும்பலின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது